இரட்டை கொலை வழக்கு:4 போ் கைது

தஞ்சாவூரில் கடன் பிரச்னை தொடா்பாக அரசுப் பெண் ஊழியா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூரில் கடன் பிரச்னை தொடா்பாக அரசுப் பெண் ஊழியா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வனிதா (38). இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரையும், திருவையாறு அருகேயுள்ள திருவேதிக்குடியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான சிங்காரவேல் மகன் கனகராஜையும் (34) சிலா் செவ்வாய்க்கிழமை காலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்தக் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதையடுத்து, தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வனிதாவின் சின்னம்மா மகனான எம். பிரகாஷ் (32), இவரது நண்பா்களான பி. விஸ்வபிரசாத் (20), என். சூரியா (20), மகேஸ்வரி (34) ஆகியோரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பிரகாஷிடமிருந்து வனிதா 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதும், இதில் 1.50 லட்சத்தை வனிதா திருப்பிக் கொடுத்ததும், மீதி ரூ. 50,000 மற்றும் வட்டித் தொகையை வனிதா கொடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், இதனால், வனிதாவும், அவரது வீட்டில் தங்கியிருந்த கனகராஜூம் கொலை செய்யப்பட்டனா் என்பதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com