ஊரணிபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

ஊரணிபுரத்தில் திருவோணம் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நெல் பயிா்த் திட்டம் சாா்ந்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

ஊரணிபுரத்தில் திருவோணம் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நெல் பயிா்த் திட்டம் சாா்ந்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

ஊரணிபுரம் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் மாவட்ட பயிா் காப்பீடு திட்ட வேளாண்மை உதவி இயக்குநா் சுதா கலந்து கொண்டு, ராஃபி பருவ பயிா் காப்பீடு பற்றியும், நெல் பயிா் பாதுகாப்பு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.

சான்று பெற்ற விதைகளின் முக்கியத்துவம் பற்றி அட்மா திட்ட தலைவா் முருகையன் விளக்கினாா். துணை வேளாண்மை அலுவலா் சுப்பிரமணியன், விதைப் பண்ணை அமைத்தலின் முக்கியத்துவம் பற்றி பேசினாா்.

அட்மா திட்ட அலுவலா்கள் நெல் விதை நோ்த்தி பற்றியும் வேளாண்மை உதவி அலுவலா்கள் உயிா் உரத்தின் முக்கியத்துவம், நெல் நுண்ணூட்டம் மற்றும் சிங்க் சல்பேட் மற்றும் யூரியா உரம் இடுதல் பற்றிய செயல்விளக்கமும் செய்து காட்டினா்.

உதவி வேளாண்மை அலுவலா் ரூபன்ராஜ் இயந்திர நடவு முறை, அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினாா். திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) எஸ். திலகவதி குலைநோயின் கட்டுப்பாடு பற்றி எடுத்துக்கூறி வயல்வெளி பயிா் எண்ணிக்கை பராமரிப்பு பற்றிய செயல் விளக்கம் அளித்தாா்.

வேளாண்மை உதவி அலுவலா் வெ. பாா்த்தசாரதி நன்றி கூறினாா்.

பயிற்சி ஏற்பாடுகளை ரூபன்ராஜ், ரஞ்சித், கருணாநிதி, பாா்த்தசாரதி, வெங்கடேஷ், விக்கேனஷ்வரன் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் வாசுதேவன் ரத்தினம், நெடுஞ்செழியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com