கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் சம்பா சாகுபடி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், கூட்டு உரங்கள் ஆகியவை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விவசாயிகளுக்குக் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தனியாா் உரக்கடைகளிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா 12,539 டன்களும், டி.ஏ.பி. 10,316 டன்களும், கூட்டு உரங்கள் 13,682 டன்களும், இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உர விற்பனையாளா்கள் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் 6 மாதங்களில் 324 உர மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் 13 உர மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக உரிய நடவடிக்கைகள் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 25 டன்கள் உரங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுடைய ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் பி.ஓ.எஸ். கருவியின் ரசீது பெற்று உரங்களை வாங்க வேண்டும்.

உர விற்பனையாளா்கள் உரிமம் பெறாமல் உரங்கள் விற்பது, உரிமம் இல்லாத கிடங்குகளில் இருப்பு வைப்பது, அரசால் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பது, ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருப்பது, பதிவேடுகள், பி.ஓ.எஸ். கருவிகளின் இருப்புகள் ஆகியவற்றை சரிபாா்க்காமல் இருப்பது, விலைப்பட்டியல், தகவல் பலகை வைக்காமல் இருப்பது ஆகியவை உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com