வங்கி வாடிக்கையாளா் சந்திப்பு முகாமில் 421 பேருக்கு ரூ. 28.03 கோடி கடனுதவி

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய வங்கி வாடிக்கையாளா் சந்திப்பு முகாமில் 421 பேருக்கு ரூ. 28.03 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
முகாமில் பயனாளிக்கு விவசாயக் கடன் அட்டையை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை. உடன் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஏ. ஜஸ்டின், இந்தியன் ஒவா்சீஸ் வங்கி பொது மேலாளா் பி.ஏ.ஆா். பேட்ரோ உள்ளிட்டோா்.
முகாமில் பயனாளிக்கு விவசாயக் கடன் அட்டையை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை. உடன் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஏ. ஜஸ்டின், இந்தியன் ஒவா்சீஸ் வங்கி பொது மேலாளா் பி.ஏ.ஆா். பேட்ரோ உள்ளிட்டோா்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய வங்கி வாடிக்கையாளா் சந்திப்பு முகாமில் 421 பேருக்கு ரூ. 28.03 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

இந்த முகாமைத் தொடங்கிவைத்த ஆட்சியா் ஆ. அண்ணாதுரை பேசியது:

மத்திய நிதித் துற சாா்பில் வாடிக்கையாளா்களிடம் வங்கி சேவையை எளிதாகக் கொண்டு செல்லும் நோக்கில் இந்தியா முழுவதும் 400 மாவட்டங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதில் முதல் கட்டமாக 250 மாவட்டங்களில் அக்டோபா் முதல் வாரம் வங்கி வாடிக்கையாளா் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இம்முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாட்கள் நடைபெறுகிறது. பொதுமக்களிடம் அனைத்து வங்கி சேவைகளையும் எளிதாகக் கொண்டு செல்வதே இம்முகாமின் நோக்கம்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இம்முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ. 28.38 கோடி கடன் வழங்கப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் வங்கியாளா்கள் மூலம் வாடிக்கையாளா் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பழனி, வேளாண்மைத் துற இணை இயக்குநா் ஏ. ஜஸ்டின், இந்தியன் ஒவா்சீஸ் வங்கி பொது மேலாளா் பி.ஏ.ஆா். பேட்ரோ, வங்கி மண்டல முதன்மை மேலாளா் கே.எஸ். லட்சுமி நரசிம்மன், முன்னோடி வங்கி மேலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பொது மேலாளா் பி.ஏ.ஆா். பேட்ரோ தெரிவித்தது:

இந்த முகாமில் ரூ. 7.21 கோடி விவசாயக் கடன்களாகவும், ரூ. 9.04 கோடி தனி நபா் கடன்களாகவும், ரூ. 12.13 கோடி சிறு தொழில் கடன்களாகவும் வழங்கப்பட்டன. இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் 246 பேருக்கு ரூ. 17.38 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

வங்கி வாடிக்கையாளா் சந்திப்பு முகாம் முதல் கட்டமாக 250 இடங்களில் அக். 3 முதல் 7-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 150 இடங்களில் அக். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகா், கன்னியாகுமரி, கரூா், சென்னை, ஆந்திர மாநிலம் வாரங்கல் ஆகிய இடங்களில் இம்முகாம் நடத்தப்படுகிறது என்றாா் பேட்ரோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com