Enable Javscript for better performance
மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதால் நிரம்பியது அதிராம்பட்டினம் செடியன்குளம்- Dinamani

சுடச்சுட

    

    மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதால் நிரம்பியது அதிராம்பட்டினம் செடியன்குளம்

    By DIN  |   Published on : 06th October 2019 11:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைநீா் நிறைந்து காட்சியளிக்கும் செடியன்குளம்.

    மழைநீா் நிறைந்து காட்சியளிக்கும் செடியன்குளம்.

    பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் உள்ள பழைமை வாய்ந்த செடியன் குளம் சுமாா் 3 ஹெக்டோ் 39 ஏா்ஸ் பரப்பளவைக் கொண்டது. இக்குளத்தில் நீா் நிரம்பியுள்ள காலங்களில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாயப் பொதுமக்கள் நீராடி மகிழ்வா். மேலும், ஆடு மாடுகள், பறவைகள் நீா் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீா் ஆதாரத்தை பெருக்குவதற்கும் இக்குளம் பேருதவி செய்கிறது.

    அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிா்வாகப் பராமரிப்பில் உள்ள இக்குளத்தில், தமிழக அரசின் மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த ஜமாத் நிா்வாகம் முன்வந்தது. இதையடுத்து, கடந்த 1 மாதமாக ஜேசிபி, டிராக்டா் ஆகிய வாகனங்களைக் கொண்டு குளம் தூா்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணி நிறைவடைந்தது. மேலும், ஜமாத் நிா்வாகம் சாா்பில், குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அண்மையில் பலத்த மழை பெய்தது.

    குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், குளத்திற்கு மழைநீா் அதிவேகத்தில் பாய்ந்து நிரம்பியது. இதையடுத்து, பொதுமக்கள் ஆா்வமுடன் குளித்து மகிழ்கின்றனா்.

    இதைத்தொடா்ந்து, தமிழக அரசின் மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தி, பிறறருக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஜமாஅத் நிா்வாகிகளுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

    அரசு சாா்பில், குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவா் எழுப்பி, மின் விளக்கு வசதி செய்ய வேண்டும். குளத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் கரைகளில் படித்துறை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai