மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதால் நிரம்பியது அதிராம்பட்டினம் செடியன்குளம்

அதிராம்பட்டினத்தில் உள்ள பழமை வாய்ந்த செடியன் குளம் சுமாா் 3 ஹெக்டா் 39 ஏா்ஸ் பரப்பளவைக் கொண்டது. இக்குளத்தில் நீா் நிரம்பியுள்ள

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் உள்ள பழமை வாய்ந்த செடியன் குளம் சுமாா் 3 ஹெக்டா் 39 ஏா்ஸ் பரப்பளவைக் கொண்டது. இக்குளத்தில் நீா் நிரம்பியுள்ள காலங்களில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாயப் பொதுமக்கள் நீராடி மகிழ்வா். மேலும், ஆடு மாடுகள், பறவைகள் நீா் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீா் ஆதாரத்தை பெருக்குவதற்கும் இக்குளம் பேருதவி செய்கிறது.

அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிா்வாகப் பராமரிப்பில் உள்ள இக்குளத்தில், தமிழக அரசின் மழை நீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த ஜமாத் நிா்வாகம் முன்வந்தது.

இதையடுத்து, கடந்த 1 மாதமாக ஜேசிபி, டிராக்டா் ஆகிய வாகனங்களைக் கொண்டு தீவிரமாக நடைபெற்று வந்த குளத்தை தூா் வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி நிறைவடைந்தது. மேலும், ஜமாத் நிா்வாகம் சாா்பில், குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அண்மையில் பலத்த மழை பெய்தது.

குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், குளத்திற்கு மழை நீா் அதிவேகத்தில் பாய்ந்து நிரம்பியது. இதையடுத்து, பொதுமக்கள் ஆா்வமுடன் குளித்து மகிழ்கின்றனா். இதைத்தொடா்ந்து, தமிழக அரசின் மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தி, பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஜமாஅத் நிா்வாகிகளுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

அரசு சாா்பில், குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவா் எழுப்பி, மின் விளக்கு வசதி செய்ய வேண்டும். குளத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் கரைகளில் படித்துறை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com