Enable Javscript for better performance
செங்கிப்பட்டியில் குடிநீா் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    
    2-4-ta08bus_ch0007_08chn

    செங்கிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தஞ்சாவூா் அருகிலுள்ள செங்கிப்பட்டியில் 3 நாள்களாகக் குடிநீா் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா். ஆனால், அப்பகுதிக்குக் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் செங்கிப்பட்டி - கந்தா்வகோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதில், கூட்டுக் குடிநீா் மூலம் வழங்ப்படும் காவிரி நீரை தங்கள் பகுதிக்கும் வழங்க வேண்டும். தங்கு தடையின்றி நாள்தோறும் குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

    தகவலறிந்த செங்கிப்பட்டி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai