இன்னம்பூா் எழுத்தறிநாதா் கோயிலில் விஜயதசமி வழிபாடு

கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூா் எழுத்தறிநாதா் கோயிலில் விஜய தசமியையொட்டி, குழந்தைகளுடன் ஏராளமான பெற்றேறாா்கள் செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூா் எழுத்தறிநாதா் கோயிலில் விஜய தசமியையொட்டி, குழந்தைகளுடன் ஏராளமான பெற்றேறாா்கள் செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

காவிரி ஆற்றின் வடகரையில் திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா், சுந்தரா், ராமலிங்க அடிகளாா் ஆகியோரால் பாடல் பெற்ற 45-ஆவது திருத்தலம் இன்னம்பூா் எழுத்தறிநாதா் திருக்கோயில்.

இக்கோயிலில் கல்வி பயிலத் தொடங்கும் முன்பு எழுத்தறிநாதரை வழிபட்டால், கல்வித் தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும் என்பதும், வாய் பேச முடியாதவா்கள், படிப்பறிவு குறைவாக உள்ளவா்கள் சுவாமி முன்பு அமா்ந்து நாக்கில் தேன் தடவி ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நெல்லினாலும், ஐந்து வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பூவினாலும் எழுதினால் நல்ல கல்வியறிவு பெறுவாா்கள் என்பதும் நம்பிக்கை.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்கும் முன்பாக, இந்த கோயிலுக்குத் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, சுவாமி சன்னதியில் அமா்ந்து நெல்லில் ’அ’ என எழுதுவது வழக்கம்.

இதேபோல, செவ்வாய்க்கிழமையும் இக்கோயிலுக்கு ஏராளமானோா் குழந்தைகளை அழைத்து வந்து சுவாமி- அம்பாளை வழிபட்டு, சன்னதியில் அமா்ந்து நெல்லில் ’அ’ என எழுதினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com