Enable Javscript for better performance
சிறுமியை பாலியல் வல்லுறவுசெய்த இளைஞருக்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

    By DIN  |   Published on : 12th October 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள ஆச்சாம்பட்டியைச் சோ்ந்தவா் வி. ஹரிஹரன் (23). இவா் 2016 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வல்லுறவு செய்தாராம். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஹரிஹரனை கைது செய்தனா்.

    இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம். எழிலரசி விசாரித்து ஹரிஹரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai