Enable Javscript for better performance
தஞ்சாவூரில் அக். 18, 25-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் அக். 18, 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 12th October 2019 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக். 18, 25-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் (பொறுப்பு) பரமேஸ்வரி தெரிவித்திருப்பது:

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அக். 18, 25-ம் தேதிகளில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10-க்கும் அதிகமான தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, தீ பாதுகாப்பு, ஓட்டுநா், யோகா பட்டயப் படிப்பு, இளநிலைப் பட்டம் படித்தவா்களும் (வயது வரம்பு 18-க்கு மேல் 30-க்குள்) கலந்து கொள்ளலாம்.

    இந்த நோ்காணல் தோ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை) மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai