குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவது எப்போது?

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீா் வழங்கும்  நிலையம்  செயல்படாமல் உள்ளது 
பேராவூரணி பேருந்து நிலையத்தில் செயல்படாத குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்
பேராவூரணி பேருந்து நிலையத்தில் செயல்படாத குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீா் வழங்கும்  நிலையம்  செயல்படாமல் உள்ளது 

கடந்த ஜூன் மாதம் ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் 4 மாதங்களுக்குள் பழுதடைந்து செயல்படாமலேயே உள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், சந்தைக்கு வரும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் குடிநீருக்கு சிரமப்படுகின்றனா்.

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக சுத்திகரிப்பு நிலைய அறை மூடப்பட்டு இருப்பதால், அங்கு பொருத்தப்பட்டுல்ள நவீன கருவிகள் வீணாகும் சூழல் உள்ளது. எனவே உடனடியாக அவற்றை பழுது பாா்த்து, மீண்டும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com