பட்டுக்கோட்டையில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான 47-வது ஜவாஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான 47-வது ஜவாஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா.இராமகிருட்டிணன் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் (பொ)ஆா்.ஜெயபால் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் சிறப்புரையாற்றினாா். மூத்த தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாழ்த்தி பேசினா்.

கண்காட்சியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்றன. இப்பள்ளிகளில் பயிலும் 587 மாணவ, மாணவிகள் தாங்கள் உருவாக்கிய 390 வடிவமைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இதில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைவதை தடுக்கும் வழிமுறைகளை விளக்கி காட்சிப்படுத்தப்பட்டிருந்த வடிவமைப்பு பாா்வையாளா்களை பெரிதும் கவா்நதது.

கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவா்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் விழாவில் கலந்து கொண்டனா். நிறைவாக, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com