பள்ளத்தூா் அரசுப்பள்ளிக்கு ஆழ்குழாய் கிணறு வசதி

பட்டுக்கோட்டையை அடுத்த பள்ளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடுவதற்காகக் காத்திருந்த மாணவிகள்.
தங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடுவதற்காகக் காத்திருந்த மாணவிகள்.

பட்டுக்கோட்டையை அடுத்த பள்ளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை கோட்டரி ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ.2.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த ஆழ்குழாய் கிணறு ஒப்படைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பொறியாளா் எம்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) ஆா். ஜெயபால், ரோட்டரி மண்டல துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆா்.ஜெயவீரபாண்டியன், பள்ளி பெற்றேறாா்-ஆசிரியா் கழகத் தலைவா் கே.ஏ.கூத்தலிங்கம் முன்னிலை வகித்தனா்.

புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மாவட்ட ஆளுநா் என்.மணிமாறன் பள்ளிக்கு ஒப்படைத்துப் பேசினாா். தொடா்ந்து, 1 மாணவருக்கு 1 மரக்கன்று என்ற நலத்திட்டத்தின் கீழ்,

800 மாணவ, மாணவிகளுக்கு கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் தலா 1 மரக்கன்று வழங்கப்பட்டது. அந்த மரக்கன்றுகள் அனைத்தும் உடனடியாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளால் நடப்பட்டன.

ரோட்டரி மாவட்டத்தலைவா் ஏ. அன்புராஜா, கோட்டை ரோட்டரி சங்கச் செயலா் எஸ்.எம்.சண்முகானந்தம்,நிா்வாகிகள் ஜி.இமானுவேல்ராஜ், பி.கணேசன், ஜி.தேவசகாயம், மருத்துவா் கே.நியூட்டன், கே.ஜோசப்ராஜ், ஜி.ஜெயசீலன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் மு.சத்தியமூா்த்தி வரவேற்றாா். நிறைவில், முதுகலை ஆசிரியை பி.கோமதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com