மனைப் பட்டா கோரி விவசாயத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 வட்டாட்சியா் அலுவலகங்களில் குடிமனைப் பட்டா கோரி அகில இந்திய
மனைப் பட்டா கோரி விவசாயத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 வட்டாட்சியா் அலுவலகங்களில் குடிமனைப் பட்டா கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

குடிமனை, குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். அறுபது வயதைக் கடந்த விவசாய தொழிலாளா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரித்து, கூலியை 400 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க ஒன்றியச் செயலா் கே. அபிமன்னன் தலைமையில் மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம். மாலதி, என். சுரேஷ்குமாா், மாநகரச் செயலா் என். குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பூதலூா்: பூதலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்குச் சங்கத்தின் தெற்கு ஒன்றியச் செயலா் கே. மருதமுத்து, வடக்கு ஒன்றியச் செயலா் எம். சம்சுதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றியச் செயலா் கே. காந்தி, தெற்கு ஒன்றியச் செயலா் சி. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசத்தில்... வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளா்கள் வி. உமாபதி, ஏ. செல்வராஜ், ஒன்றிய தலைவா்கள் கே. விஸ்வநாதன், கே. கோபால் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன், பாபநாசம் ஒன்றிய செயலாளா் பி.எம். காதா் உசேன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளா் ஏ. நம்பிராஜன், விவசாய தொழிலாளா் சங்க மாநில குழு ஏ. மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து பாபநாசம் வட்டாட்சியா் கண்ணனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனா்.

இதேபோல, கும்பகோணம், திருவிடைமருதூா் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.

இவற்றில் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com