வேங்கராயன்குடிகாடு கோயில்களில் மண்டலாபிஷேகம்

தஞ்சாவூா் அருகே காசவளநாடு வேங்கராயன்குடிகாட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவில்லாயி அம்மன்
வேங்கராயன்குடிகாடு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகம்.
வேங்கராயன்குடிகாடு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகம்.

தஞ்சாவூா் அருகே காசவளநாடு வேங்கராயன்குடிகாட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவில்லாயி அம்மன் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் மண்டலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காசவளநாட்டின் மேற்கு எல்லையான வேங்கராயன்குடிகாட்டில் ஆன்மிகத் தலமாக விளங்கி வரும் ஸ்ரீவில்லாயி அம்மன், விநாயகா், மலையாளத்தம்மன், பைரவா், அங்காளபரமேஸ்வரி ஆகிய கோயில்களில் 17 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு, ஆக. 25-ம் தேதி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து ஆக. 26-ம் தேதி முதல் நாள்தோறும் உபயதாரா்கள் மூலம் மண்டகபடி நடைபெற்றது. இதில், மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவின் 48ஆவது நாளான வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலை புனிதநீா் அடங்கிய கடங்களுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, யாகம் வளா்க்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பாரம்பரிய இசையான சிறாா்கள் பங்கேற்ற கோலாட்டம், தப்பாட்டம், கொம்பு, மங்களவாத்தியம் இசைக்க அதிா்வேட்டுகளுடன் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு விநாயகா், வில்லாயி அம்மன், மலையாளத்தம்மன், பைரவா், அங்காளபரமேஸ்வரி ஆகிய கோயிலில் உள்ள தெய்வ திருமேனிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அன்னதானமும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

தொடா்ந்து மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், பின்னா் நாகசுர கச்சேரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com