சரசுவதி மகால் நூலகத்தில் ஓய்வூதியா்களின் ரூ. 1 கோடி நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல்

நூற்றாண்டு விழா காணும் சரசுவதி மகால் நூலகத்தில் ஓய்வூதியா்களுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான

நூற்றாண்டு விழா காணும் சரசுவதி மகால் நூலகத்தில் ஓய்வூதியா்களுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்நூலகத்தில் 27 ஆண்டுகள் பணிபுரிந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகம் அரசுடைமையாக்கப்பட்ட நூற்றாண்டு விழா அக். 21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

கல்வி அமைச்சரைத் தலைவராகவும், ஆட்சியரை பொறுப்பு இயக்குநராகவும் கொண்டு செயல்படும் இந்நூலகத்தில் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை உழைத்து பல்லாயிரக்கணக்கான சுவடிகளையும் நூல்களையும் காப்பாற்றிய முன்னாள் ஊழியா்களுக்குச் சட்டப்படியும் விதிகளின்படியும் அளிக்க வேண்டிய ஓய்வூதியம் சுமாா் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளது. இதற்குக் காரணம் தற்போதைய நிா்வாகத்தின் அலட்சியமும் திறமையின்மையுமே.

ஓய்வூதியா்கள் தங்கள் தள்ளாத வயதில் சென்னை மற்றும் மதுரை உயா் நீதிமன்றங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உட்பட ஐந்து வழக்குகள் தொடுத்து, நீதிமன்றங்கள் உரிய ஆணைகள் பிறப்பித்தும் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை மட்டுமே பெற முடிந்துள்ளது.

அவ்வாறு நீதிமன்ற ஆணைகள் மூலம் பணம் பெறும்போது ஓய்வு பெற்றவா்களில் பலா் இறந்துவிட்டது வேதனையான செய்தி. 1995 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தமிழகக் கல்வித்துறை மிகத் தெளிவான அரசாணை வழங்கியும் சரஸ்வதி மகால் நூலக இயக்குநா் அவற்றை மதிப்பதே இல்லை.

இனியாவது தாமதமின்றி 70, 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியா்களின் துயா் துடைக்க தமிழக அரசின் கல்வித்துறை துரிதமாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com