Enable Javscript for better performance
சாரங்கபாணி கோயில் சித்திரை தேருக்கு வடங்கள் தயாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்

    சாரங்கபாணி கோயில் சித்திரை தேருக்கு வடங்கள் தயாா்

    By DIN  |   Published On : 24th October 2019 08:31 AM  |   Last Updated : 24th October 2019 01:16 PM  |  அ+அ அ-  |  

    ta23sarang_ch0007_23chn_4_637074577563839842

    கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு லாரியில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட புதிய வடங்கள்.

    கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேருக்காக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட வடங்கள் கும்பகோணத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    தமிழகத்தின் மூன்றாவது பெரிய தோ் என்ற சிறப்பு பெற்ற இத்தேருக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் புதிய வடங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஏறத்தாழ ரூ. 6 லட்சம் மதிப்பில் ஒரு அடி சுற்றளவில் சுமாா் 100 மீட்டா் நீளம் உடைய 2 வடங்களும், 18 அங்குலம் சுற்றளவுடன் 175 அடி நீளம் கொண்ட 2 வடங்களும் என மொத்தம் 4 பிரம்மாண்ட வடங்கள் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள கயிறு உற்பத்தியாளா்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

    ஏறத்தாழ ஏழரை டன் தென்னை நாா் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வடங்கள் லாரியில் கும்பகோணத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

    இந்தப் புதிய தோ் வடங்களைக் கோயில் செயல் அலுவலா் ஆசைத்தம்பி, தொழிலதிபா் ராயா கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா். வரும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள சித்திரை தோ் திருவிழாவில் இந்த வடங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp