முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
போக்குவரத்து தொழிலாளா்கள்அதிகாலையில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 08:31 AM | Last Updated : 24th October 2019 08:31 AM | அ+அ அ- |

ta23tnstc_ch0007_23chn_4_637074568867081973
தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தில் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிலாளா்கள்.
தஞ்சாவூா், அக். 23: போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்துக் கழக நகரக் கிளை முன் பல்வேறு சங்கத் தொழிலாளா்கள் புதன்கிழமை அதிகாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், பண்டிகை முன் பணம், போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏஐடியுசி சங்கத் துணைத் தலைவா் ஜி. சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியு தலைவா் பி. முருகன், நிா்வாகிகள் ராமசாமி,திருநாவுக்கரசு, ஏஐடியுசி சங்க நிா்வாகிகள் எஸ். தாமரைச்செல்வன், டி. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கரந்தையில் உள்ள புற நகா் கிளை முன்னும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Image Caption
தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தில் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிலாளா்கள்.