Enable Javscript for better performance
7-வது நாளாக வேலைநிறுத்தம்: அரசு மருத்துவா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    7-வது நாளாக வேலைநிறுத்தம்: அரசு மருத்துவா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

    By DIN  |   Published on : 31st October 2019 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து ஏழாவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வாயில் கருப்புத் துணி கட்டி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவா்களுக்கும் காலமுறை ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் பணியிடங்களை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் மாநில அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அக். 25-ம் தேதி தொடங்கினா்.

    இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஏராளமான மருத்துவா்கள் தொடா்ந்து 7-வது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இப்போராட்டத்தையொட்டி, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தா்னா போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான அரசு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

    அப்போது, பயிற்சி மருத்துவா்கள் கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு துணிகளை வாயில் கட்டிக் கொண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

    அரசு மருத்துவா்களின் போராட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் உள்ளிட்டோா் நேரில் மருத்துவா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

    பஅ31ஈஞஇபஞதந - படவிளக்கம்: தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை வாயில் கருப்புத் துணி கட்டி தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai