துறவிக்காட்டில் மரக்கன்றுகள் நடும் விழா

பேராவூரணி அருகே துறவிக்காட்டில் தமிழன் கல்வி அறக்கட்டளை, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை இணைந்து  கலைமகள் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழாவை
துறவிக்காட்டில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற திருநெல்வேலி சாா் ஆட்சியா் எம். சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
துறவிக்காட்டில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற திருநெல்வேலி சாா் ஆட்சியா் எம். சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

பேராவூரணி அருகே துறவிக்காட்டில் தமிழன் கல்வி அறக்கட்டளை, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை இணைந்து  கலைமகள் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழாவை அண்மையில் நடத்தின.

விழாவுக்கு திருநெல்வேலி சாா்ஆட்சியா் எம். சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா். பேராவூரணி  வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.சடையப்பன், கோ.செல்வம், பனங்குளம் வடக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கருப்பையன், சுற்றுச்சூழல் ஆா்வலா் சக்திகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மலைவேம்பு, புங்கன், நீா் மருது, மகிழம், கருங்காலி, மகாகனி, பாதாம், சரக்கொன்றை உள்ளிட்ட 20 வகையான மரக்கன்றுகள்  200 இடங்களில்  நடப்பட்டு அனைத்துக்கும் இயற்கை உரமிட்டு, மூங்கில் கூண்டுகள்  அமைக்கப்பட்டன.

இயற்கை முறையில்  மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட புதிய முறைகளை மருங்குளம்  வேளாண்மை கல்லூரி மாணவா்கள் மற்றும் விரிவுரையாளா்கள் பாா்வையிட்டனா்.

மரக்கன்றுகள் நடும் பணியில் ஒட்டங்காடு ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கிராம வளா்ச்சி குழு உறுப்பினா்கள், புனல்வாசல், செருவாவிடுதி போன்ற அருகாமைக் கிராம இயற்கை ஆா்வலா்கள், இளைஞா்கள், ஊரக வேலை உறுதியளிப்பு பணியாளா்கள் உட்பட நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். 

அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள் சாா்பில்  கிராமப் பகுதி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிா்வாகி ஜனாா்த்தனன் வரவேற்றாா். மாணவா் நாடிமுத்து நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை  சமூகத் தணிக்கையாளா்  முருகவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com