சுடச்சுட

  

  அம்மாப்பேட்டையில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

  By DIN  |   Published on : 12th September 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை சென்னை பேரூராட்சிகள் இயக்குநர் அலுவலக தலைமை கண்காணிப்பு பொறியாளர் எஸ். திருமாவளவன்,  திருச்சி மண்டல பேரூராட்சிகள் செயற்பொறியாளர் ஏ. முருகேசன்,  தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி  செயற்பொறியாளர் ஜெ. மாதவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  அப்போது, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். 
  மேலும், பேரூராட்சியில் 50,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பேரூராட்சியில் முறையாக செயல்படுத்தவும் அறிவுறுத்தினர். ஆய்வின்போது,  அம்மாப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மு. பொன்னுசாமி, இளநிலை உதவியாளர் பா.முருகானந்தம், துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணி, துப்புரவு மேற்பார்வையாளர் க. கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai