சுடச்சுட

  

  ஆளுநர் மாளிகையை செப். 28-இல் முற்றுகையிட இளைஞர் பெருமன்றம் முடிவு

  By DIN  |   Published on : 12th September 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசுக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை செப். 28-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.
  தஞ்சாவூரில் ஏஐடியூசி அலுவலகத்தில் இப்பெருமன்றத்தின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  இளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசுக் கைவிட வேண்டும். 
  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும். 
  டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப். 28-ம் தேதி சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  இக்கூட்டத்துக்குப் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலர்கள் பாரதி, தினேஷ், மாநிலத் தலைவர்கள் வெங்கடேஷ், குணசேகர், மாநிலப் பொருளாளர் சிவாஜி காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai