சுடச்சுட

    

    காவேரி கூக்குரல் இயக்கப் பேரணி: ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ்: நாளை தஞ்சாவூருக்கு வருகை

    By DIN  |   Published on : 12th September 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவேரி கூக்குரல் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வெள்ளிக்கிழமை (செப்.13) தஞ்சாவூருக்கு வருகிறார். 
    இது குறித்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:
    காவிரி நதிக்குப் புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளைத் தொடங்கியுள்ளது. 
    இந்த இயக்கத்தில் அரசு மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணியை கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காவிரியில் செப். 3ஆம் தேதி தொடங்கினார். இப்பேரணி குடகு, மடிகேரி, ஹன்சூர், மைசூர், மாண்டியா, பெங்களூரு வழியாகத் தமிழகத்துக்கு வந்துள்ளது.
    இப்பேரணி தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வருகிறது. தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகிலுள்ள மஹாராஜா மகாலில் ஜக்கி வாசுதேவ் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பேசுகிறார். 
    கடந்த 50 ஆண்டுகளில் காவிரி நீர் 40 சதவீதம் குறைந்துள்ளது. தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை ஆற்றுப்படுகையில் 87 சதவீதம் மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. 
    இதை மீண்டும் உருவாக்கும் வகையில் 242 கோடி மரங்கள் நடப்பட உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் ஆற்றுப்படுகையை வேளாண் காடுகளாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
    இதற்கு ஆற்றுப்படுகையைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியை மரங்கள் வளர்க்க வேண்டும். இதற்காக 350 இடங்களில் நர்சரி ஏற்படுத்தப்படுகிறது. 
    இதன் மூலம் விவசாயிகளின் வருமானமும் பெருகும். இதற்கு பொதுமக்களும் நிதி அளிக்கலாம் என்றார் ஜெயந்தி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai