சுடச்சுட

  

  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளனத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  நெல் கொள்முதலுக்குரிய முன்னேற்பாடுகளைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் தொடங்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகச் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய உணவுக் கழகத் தொழிலாளர்களுக்கு இணையான கூலியை வழங்க வேண்டும். 
  சுமை தூக்கும் தொழிலாளர்களுக்குத் தனி வாரியம் அமைக்க வேண்டும். பணியிட விபத்தில் இறப்பவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
  டி.என்.சி.எஸ்.சி. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் கே.எஸ். முருகேசன் தலைமை வகித்தார். 
  ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், தலைவர் வெ. சேவையா, துணைச் செயலர் துரை. மதிவாணன், டி.என்.சி.எஸ்.சி. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் தி. கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் க. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai