சுடச்சுட

  

  மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
  இதில், பாரதியார் சிலைக்கு பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் மாலை அணிவித்தார். பின்னர், பாரதியாரின் சிறப்புகள், அவரது கவிதைகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறைப் பேராசிரியர் வி.எஸ்.ஆர். செம்பியன், தமிழ்த் துறைத் தலைவர் மா. சதானந்தம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai