சுடச்சுட

  

  பேராவூரணி அருகே திருமண விளம்பர பதாகை சீரமைப்பு பணியின்போது இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
  பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த  கென்னடி  மகன் விக்னேஷ்வரன் (21). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில்  வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை (செப். 12) நடக்கவிருக்கும் தனது சகோதரியின் திருமணத்துக்காக  வைக்கப்பட்டிருந்த பதாகை செவ்வாய்க்கிழமை இரவு சரிந்து விழுந்ததயைடுத்து அதை விக்னேஷ்வரன் சரி செய்தாராம். 
  அப்போது, பதாகையானது மேலே சென்ற மின் வயரில் மோதியதில் விக்னேஷ்வரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமண விழாவில் ஏற்பட்ட இச்சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai