சுடச்சுட

  

  வேலை வழங்க கோரி  தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 12th September 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாபநாசம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பணி வழங்க கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  பாபநாசம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த 4 ஆண்டுகளாக வெட்டப்பட்ட கரும்பிற்கு உரிய பணத்தை விவசாயிகளுக்கு  ஆலை நிர்வாகம் தரவில்லையாம். இதை கண்டித்து  விவசாயிகள்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
  ஆலை நிர்வாகம் படிப்படியாக வெட்டப்படும் கரும்பின் அளவை குறைத்து கொண்டதால் கடந்த ஆண்டு ஆலை இயங்கவில்லையாம். இந்நிலையில், ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லையாம். நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 
  கடந்த மாதம் மொத்த பணியாளர்கள் 287 பேரில் 11 பேர் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதை கண்டித்து ஆலை தொழிலாளர்கள் ஆலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆலை நிர்வாகத்தினர் ஒருவார காலத்துக்குள் பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவு எட்டப்படும் தெரிவித்தனர். ஆனால்,  ஆலை நிர்வாகத்தினர் இதுவரை எந்த தொழிலாளர்களையும் பணிக்கு அழைக்கவில்லை. இதை கண்டித்து ஆலை தொழிலாளர்கள் நேஷனல் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆலை முன் புதன்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதில் தமிழ்நாடு மாநில சர்க்கரை ஆலை சம்மேளன தலைவர் இளவரி, மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன்  மாநில துணை பொதுச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai