ஜெனீவா ஒப்பந்த நாள் விழா பேச்சுப் போட்டி: வேளாண், பான் செக்கர்ஸ் கல்லூரிகள் முதலிடம்

தஞ்சாவூரில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 70-வது ஜெனீவா ஒப்பந்த நாள்

தஞ்சாவூரில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 70-வது ஜெனீவா ஒப்பந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் அரசு வேளாண் கல்லூரி, பான் செக்கர்ஸ் கல்லூரிகள் முதலிடம் பெற்றன.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை ஆலோசனைப்படி, இன்றைய நிலையில் இந்தியாவின் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 
இதன்படி,  தஞ்சாவூர் மாவட்ட யூத் ரெட்கிராஸ் சார்பில் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தில் உள்ள 20 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி மாணவி ஆர். தீபதர்ஷிணி முதலிடமும், பாரத் கல்லூரி மாணவி என். ஆசிபா இரண்டாமிடமும், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மாணவி எம். சுடர்விழி மூன்றாமிடமும் பெற்றனர். 
இதேபோல,  தமிழ்ப் பேச்சுப் போட்டியில் தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவி டி. அட்சயா முதலிடமும், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மாணவர் செ. கிருஷ்ணன் இரண்டாமிடமும், பாபநாசம் தாவூத் பாட்சா கல்லூரி மாணவி வி. பூர்ணிமா மூன்றாமிடமும் பெற்றனர். 
தமிழ்ப் பேச்சுப் போட்டிக்கு சரபோஜி கல்லூரி பேராசிரியர்கள் லோகநாதன், ராஜா வரதராஜன் ஆகியோரும், ஆங்கிலப் பேச்சுப் போட்டிக்கு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியை கிருஷ்ணபிரியா மற்றும் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர். 
முன்னதாக,  தஞ்சாவூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவர் ஜி. ஜெயக்குமார் போட்டியைத் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் பி. நடராஜன், மன்னர் சரபோஜி கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com