பட்டுக்கோட்டையில் நல்ல காத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள ஸ்ரீ பரிவாரசகிதாய ஸ்ரீ நல்ல காத்தாயி அம்மன் கோயில் பல லட்சம் ரூபாய்

பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள ஸ்ரீ பரிவாரசகிதாய ஸ்ரீ நல்ல காத்தாயி அம்மன் கோயில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு, வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (செப்.9) காலை 9 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை (செப்.11) காலை 9 மணி வரை மகாகணபதி ஹோமம்,  மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
விழா நாளான புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு, கோயிலின் அனைத்து விமானங்களுக்கும் காலை 10.15 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com