சுடச்சுட

  

  அரியதிடல் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா தொடக்கம்

  By DIN  |   Published on : 13th September 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் அரியதிடல் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்,  ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் (வட திருப்பதி),  ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆகிய மூன்று கோயில்கள் மற்றும் அன்னதான சிவன் மடம் ஆகியவற்றில் முப்பெரும் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (செப்.13) தொடங்குகிறது. 
  இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை (செப்.14) மாலை வாஸ்து சாந்தி பூஜை, பிரவேச பலி, கிராம சாந்தி, ஹோமம், முதல் கால யாக பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகள், திருவிளக்கு பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்னியா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறவுள்ளன.
  செப். 16-ம் தேதி காலை 7 மணியளவில் நான்காம் கால யாக பூஜைகள், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், 9 மணியளவில் பரிவார மூர்த்திகளான ஸ்ரீ ருத்ர மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவும், பின்னர் பரிவாரம் மற்றும் மூலவர் விமானம் குடமுழுக்கு விழாவும், காலை 10.15 மணிக்கு மேல் மூலவர் குடமுழுக்கு விழாவும், பின்னர் திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai