சுடச்சுட

  

  தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 98-வது நினைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  இதில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழக இலக்கியத் துறைத் தலைவர் ஜெ. தேவி பேசியது:
  மேலைநாட்டினர் கூறும் பெண்ணியச் சிந்தனைகள் பாரதியிடம் இருந்தது. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதத்தின் மூலம் இசைக்கும் நாட்டியத்துக்கும் அவருடைய பங்களிப்பு சிறப்புக்குரியது என்றார் அவர். பல்கலைக்கழகக் கல்வித் துறை முதன்மையர் கே. கண்ணன் பேசுகையில், பாரதிக்கு 11 மொழிகள் தெரியும். இக்பாலின் கவிதையை அப்படியே பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என மொழியாக்கம் செய்தார் என்றார் அவர். 
  பேராசிரியர் என். சேஷாத்திரி பேசுகையில், பாரதி சிந்துக்குத் தந்தை. அறம்பாட வந்த மறவன் என பாரதிதாசன் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்ந்தார் என்றார் அவர். 
  பின்னர், இன்று பாரதி வாழ்ந்தால் என்ற தலைப்பில் கல்வியியல் துறை மாணவர்கள் நாடகம் நடத்தினர்.  ஒருங்கிணைப்பாளர் ஜானகி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai