சுடச்சுட

  

  தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: செப்டம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. (கூட்டம் நடைபெறும் வட்டம்-ரேஷன் கடை அமைந்துள்ள இடம் என்ற அடிப்படையில் விவரம்): தஞ்சாவூர்-காட்டூர், திருவையாறு- திருவையாறு - 4, ஒரத்தநாடு-பொட்டலங்குடிக்காடு, கும்பகோணம்-பாபுராஜபுரம், பாபநாசம்-கருப்பூர், திருவிடைமருதூர்-எஸ். புதூர், பட்டுக்கோட்டை-ஆத்திக்கோட்டை, பேராவூரணி-பெட்டநாச்சிவயல், பூதலூர்-சித்திரக்குடி.
  இந்த நியாய விலை கடைகளில் முகாமிடும் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai