அணைக்கரையில்  155 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 155 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 155 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை மழை பெய்தது. இதில்,  அணைக்கரை,  மஞ்சலாறு, திருவிடைமருதூர், வல்லம்,  திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அணைக்கரை 155, மஞ்சலாறு 73, திருவிடைமருதூர் 62, வல்லம் 34, திருக்காட்டுப்பள்ளி 33.10, கல்லணை 25, கும்பகோணம் 17.6, நெய்வாசல் தென்பாதி 16, பாபநாசம் 8, அய்யம்பேட்டை 6, பூதலூர் 5.2, பேராவூரணி 2.2, குருங்குளம் 2, ஒரத்தநாடு 1.8, அதிராம்பட்டினம் 1.10, தஞ்சாவூர்
மீண்டும் மழை: அணைக்கரை பகுதியில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதேபோல, வியாழக்கிழமை மாலையும் மழை பெய்தது. இதனால் வயல்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, கீழணையிலிருந்து தெற்கு ராஜன் வாய்க்கால், வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு ஆகியவற்றில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com