செப். 17-இல் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் செப். 17-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது:தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் செப். 17-ம் தேதி காலை 10 மணி முதல் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8754748488, 04362-264665 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com