Enable Javscript for better performance
செருவாவிடுதியில் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செருவாவிடுதியில் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 14th September 2019 06:29 AM  |   அ+அ அ-   |    |  

    பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  பேராவூரணி ஒன்றிய அளவிலான தூய்மைக் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை,  தஞ்சாவூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை, பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இணைந்து நடத்திய,  இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமை வகித்தார். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் எஸ். சடையப்பன்(வ.ஊ),  கோ.செல்வம் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    முகாமில்,  119 தூய்மைக் காவலர்களுக்கு இசிஜி,  ரத்தம்,  சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும்,  தடுப்பூசி போடப்பட்டது.  முகாமில்,  மருத்துவ அலுவலர்கள்  ரஞ்சித்,  வெங்கடேசன்,  ரிஸ்வானா பேகம்,  தீபா,  கோகிலா,  அம்சவாணி,  கண் மருத்துவ நுட்பநர் ஆர். திரவியம்,  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன்,  மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன்,  ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

    kattana sevai