Enable Javscript for better performance
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கையாண்டால் அதிக மகசூல் கிடைக்கும்: வேளாண் துறை ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கையாண்டால் அதிக மகசூல் கிடைக்கும்: வேளாண் துறை ஆலோசனை

    By DIN  |   Published on : 14th September 2019 06:31 AM  |   அ+அ அ-   |    |  

    விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கையாண்டால் அதிக மகசூல் கிடைக்கும் என தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
    தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.  விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலம்  திருந்திய நெல் சாகுபடி செய்ய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 
    திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி  பாய் நாற்றாங்கால் அமைத்து ஒற்றை நாற்றுக்கள் நடவு செய்வதற்கு  ஹெக்டேருக்கு  7-8 கிலோ விதைகள் போதுமானது.  நேரடி  விதைப்பு முறையில் ஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ விதை தேவைப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகள் விதைக்கு செலவிடும் தொகை கணிசமாக குறைகிறது.
    திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஹெக்டேர் நாற்றாங்கால் அமைக்க 2.5 சென்ட்(100 சதுர மீட்டர்) இடம் போதுமானது.  நேரடி நடவு முறையில் ஹெக்டேருக்கு 20 சென்ட் (800 சதுர மீட்டர்) தேவைப்படுகிறது. இடம் குறைவதன் மூலம் நாற்றாங்கால் பராமரிப்பு, பூச்சி நோய் கண்காணிப்பு எளிதாவதுடன்,  தரமான நாற்றுக்களையும் உற்பத்தி செய்ய முடியும். 
     நாற்றாங்காலிருந்து 15 நாள்கள் வயதுடைய இரு இலை பருவத்தில் நாற்றுக்கள் வயலில் பிரித்து  நடப்பட வேண்டும். நேரடி நடவு முறையில் 22 நாள்கள் வயதுடைய நாற்றுக்கள் நான்கு இலை பருவத்தில் நாற்றுக்கள் பிரித்து நடப்பட வேண்டும். இளம் நாற்றுக்கள் நடப்படுவதால் நேரடி நடவு முறையைவிட சீரிய வளர்ச்சி காணப்படுகிறது. 
    நீர் மறைய நீர் கட்டும் தொழில்நுட்பத்தின் மூலம் நீர் சிக்கனமாக பயன்படுத்தப்பட்டு,  நீர் மேலாண்மை பின்பற்றப்படுகிறது. கோனோவீடர் பயன்பாட்டின் மூலம்  செடிகளின் வேர்ப் பகுதிக்கு  காற்றோட்டம் கிடைப்பதால் செடிகளின் தூர்கட்டும் திறன் அதிகரித்து, அதிக மகசூல் பெற உதவுகிறது. களைகள் மண்ணிலேயே மக்கப்பட்டு இயற்கை உரமாக பயன்படுகிறது மற்றும்  மண்ணின் வளம் காக்கப்படுகிறது. சீரான இடைவெளியில்   நாற்றுக்கள் நடப்படுவதால், களையெடுத்தல் மற்றும் உரமிடுதல் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 
    எனவே,  அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருமானத்தை அதிகரிக்கலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp