விவசாயிகளுக்கு நீரா பானம் தயாரிப்பு பயிற்சி

பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு தென்னையில் நீரா பானம் தயாரிக்கும் பயிற்சி

பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு தென்னையில் நீரா பானம் தயாரிக்கும் பயிற்சி திப்பியக்குடி கிராமத்தில் விவசாயி சாமிநாதன் தென்னந்தோப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் வேளாண்மை அலுவலர் (விற்பனை மற்றும் வணிகம்) ஆர்.தாரா கலந்து கொண்டு,  நீரா பானம் தயாரிப்பு முறைகள், மரம் தேர்வு,  நீரா பானம் தயாரிப்புக்கு உரிமம்  பெறுதல்,  குழுக்கள் அமைத்தல்,  நீரா பானத்தை பதப்படுத்துதல், தென்னை வெல்லம் தயாரித்தல்,  நீரா பானத்தில் உள்ள  ஊட்டச்சத்து பொருள்கள்  மற்றும்   நீரா பானம் பயன்பாட்டு முறைகள் ஆகியன குறித்து விளக்கினார். 
நிகழ்ச்சியில்,  திப்பியக்குடி விவசாயி சாமிநாதன்  பேசுகையில்,  நீரா பானம் தயாரிப்பதற்கான உரிமம் பெற்று தற்போது அதை அவர் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும், தனக்கு மரம் 1-க்கு சராசரியாக ஒவ்வொரு நாளும் ரூ.500 லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.  நீரா பானத்தில் இருந்து தென்னை வெல்லம் தயாரித்தல், நீரா பானம்  சந்தைபடுத்தும் வழிமுறைகள் ஆகியன குறித்தும் தனது அனுபவங்களை பயிற்சி பெறச் சென்ற பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார். நிறைவில், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சி.சுகிதா நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் த.ரவி,  வி. ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com