பட்டுக்கோட்டையில் 1 வாரத்தில் 5,000 மரக்கன்று நடும் பணி தொடக்கம்

பட்டுக்கோட்டை பகுதியில் லாரல் பள்ளி என்எஸ்எஸ் அமைப்பு, மனோரா ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, 1 வாரத்திற்குள் 5,000 மரக்கன்றுகளை நடும் பணியும், அவற்றுக்கு பாதுகாப்பு கூண்டுகளைப் பொருத்தும் பணியும் செவ்வா

பட்டுக்கோட்டை பகுதியில் லாரல் பள்ளி என்எஸ்எஸ் அமைப்பு, மனோரா ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, 1 வாரத்திற்குள் 5,000 மரக்கன்றுகளை நடும் பணியும், அவற்றுக்கு பாதுகாப்பு கூண்டுகளைப் பொருத்தும் பணியும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  
பட்டுக்கோட்டை கரிக்காடு செட்டிக்குளத்தில் தொடங்கி, சேண்டாக்கோட்டை வரையிலான சுமார் 6 கி.மீ.தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும், இது தவிர, லாரல் பள்ளி வளாகம் மற்றும் செட்டியக்காடு, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் வேம்பு, வாகை, புங்கை, புளி உள்ளிட்ட பல்வேறு மரக் கன்றுகள் நடப்படுகின்றன.  இதையொட்டி, லாரல் பள்ளி வளாகத்தில் மனோரா ரோட்டரி சங்கத் தலைவர்  என். நடராஜன் தலைமையில், லாரல் பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் முன்னிலையில், பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்(பொ) ஆர். ஜெயபால் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் வழக்குரைஞர் ஆர். ஜெயவீரபாண்டியன், முன்னாள் துணை ஆளுநர் வழக்குரைஞர் கே. விவேகானந்தன், மண்டலச் செயலர் ஆர். அண்ணாதுரை,  தலைவர் தேர்வு எம்.எஸ். செல்வராஜ் மற்றும் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், பள்ளி முதல்வர் வி.பி. சந்திரசேகர், தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனோரா ரோட்டரி சங்கச் செயலர்  சிவ. சரவணன் நன்றி கூறினார். முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை வரை சுமார் ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டு,  கூண்டுகள் பொருத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com