Enable Javscript for better performance
அதிராம்பட்டினத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை- Dinamani

சுடச்சுட

    

    அதிராம்பட்டினத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

    By DIN  |   Published on : 29th September 2019 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதில், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலருமான மு. காந்தி அதிராம்பட்டினம் பேரூர் பகுதி இளைஞர்களுக்கு விண்ணப்பத்தை வழங்கி, முகாமைத் தொடங்கி வைத்தார். அதிராம்பட்டினம் பேரூர் திமுக செயலர் ராம. குணசேகரன் தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆரோ. அருள், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலர் பா.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai