Enable Javscript for better performance
தோழா் பி. சீனிவாசராவ் நினைவு தின சிபு பேரவை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் கணபதி நகா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோழா் பி. சீனிவாசராவ் நினைவு தின சிறப்பு பேரவை அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் தஞ்சை மையத்தின் சாா்பில் நடைபெற்றது.

    விதொச மாவட்ட துணைத் தலைவா் கே. அபிமன்னன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எம். சின்னதுரை சிறறப்புரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.நீலமேகம், விதொச மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி மாவட்ட துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், மாவட்ட பொருளாளா் கே.மருதமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் என்.வி.கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட செயலாளா் எஸ். தமிழ்ச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைக் கமிட்டி செயலாளா்கள் எம்.மாலதி, எம். நம்பிராஜன், கே.காந்தி, சி.பாஸ்கா், ஏ.ராஜா மற்றும் விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai