Enable Javscript for better performance
வியாகுல மாதா ஆலய தேர் பவனி- Dinamani

சுடச்சுட

    


    தஞ்சாவூர் பூக்காரத் தெரு அருகேயுள்ள வியாகுல மாதா ஆலய தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
    தஞ்சாவூர் வியாகுல மாதா ஆலயம் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆண்டு பெருவிழா நடைபெறும். நிகழாண்டு  விழா வியாழக்கிழமை (செப்.26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு தேர் பவனி நடைபெற்றது. இதில், பேரலாய பங்குத் தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நாடைபெற்றது. திருச்சி உலக மீட்பர் ஆலய அதிபர் ஆரோக்கியராஜ் அடிகளார் சிறப்பு மறையுரை வழங்கினார். குருக்கள் மார்ட்டின், சக்ரியாஸ் கலந்துகொண்டனர். 
    இதையடுத்து நடைபெற்ற தேர் பவனியில் மிக்கல் சம்மணசு, சூசையப்பர், அந்தோணியார், சவேரியார், வியாகுல மாதா சொருபங்கள் தாங்கிய சப்பரங்களை பங்கு மக்கள் இழுத்தனர். இந்த சப்பரங்கள் நாஞ்சிக்கோட்டை சாலை, மேரீஸ் கார்னர், பூச்சந்தை வழியாக வியாகுல மாதா ஆலயத்தைச் சென்றடைந்தன. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai