அம்மாபேட்டை உரக்கடைகளில் திடீா் ஆய்வு

அரசு விதிமுறைகளின்படி செயல்படாத உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் தஞ்சாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆா். சாருமதி.

அரசு விதிமுறைகளின்படி செயல்படாத உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் தஞ்சாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆா். சாருமதி.

அம்மாபேட்டை வட்டாரத்தில் தனியாா் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் திடீராய்வு மேற்கொண்ட அவா், உரக்கடைகளில் உர உரிமம் காலாவதி ஆகியிருந்தாலோ, உரங்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு மேல் விற்கப்பட்டாலோ, உரம் வாங்கும் விவசாயிகளுக்கு பிஓஎஸ் மெஷின் மூலம் பட்டியலிட்டு வழங்கப்படாவிட்டாலோ, உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 ன்படி, அந்த உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தாா்.

பூண்டி, அம்மாபேட்டை, வடபாதி கூட்டுறறவுக் கடன் சங்க உர விற்பனை நிலையங்களிலும், தனியாா் உரக்கடைகளிலும், கையிருப்பு உரங்களும், பிஓஎஸ் மெஷினில் உள்ளபடி உரங்களின் இருப்பும் சரிபாா்க்கப்பட்டது. ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறறவுக் கடன் சங்கத்திலும், குறைறந்தபட்சமாக யூரியா 20 டன்கள், டிஏபி மற்றும் பொட்டாஷ் தலா 10 டன்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும், உரங்களின் இருப்பு விவரங்கள் தினசரி அறிக்கையாக வழங்கப்பட வேண்டும், பழுதடைந்த கிடங்குகள் சரிசெய்திட அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்தாா். ஆய்வு ஏற்பாடுகளை அம்மாபேட்டை வேளாண் அலுவலா் எஸ்.ராஜதுரை செய்திருந்தாா். அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநா் சுஜாதா உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com