கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

திருவையாறு அருகே கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

திருவையாறு அருகே கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவையாறு அருகேயுள்ள திருபழனத்தில் இருந்து வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் குழாய் திருவையாறு - கும்பகோணம் சாலையைக் கடந்து செல்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமாா் 2 மில்லியன் லிட்டா் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தக் குழாயின் அருகிலேயே தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டக் குடிநீா் பணிக்காகக் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், இக்குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைந்ததால் அதிலிருந்து தண்ணீா் அதிக அளவில் வெளியேறியது. இதனால், இச்சாலையில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல, ஏற்கெனவே இரு முறை உடைந்து, குடிநீா் வீணாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனா்.

தகவலறிந்த போலீஸாா், அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், தொழிலாளா்கள் மூலம் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com