பெற்றோரைக் கைவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை

பெற்றோர்களைக் கைவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார் தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷ்.


பெற்றோர்களைக் கைவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார் தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷ்.
பெற்றோர்களிடம் இருந்த சொத்துகளைப் பறித்துக் கொண்டு அவர்களைக் கவனிக்காமல் கைவிடும் மகள்கள் மற்றும் மகன்கள் தொடர்பான புகார்கள் தற்போது அதிகளவில் வருகின்றன. 
இதுபோன்ற புகார்கள் மீது தமிழ்நாடு மூத்தக் குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சி. சுரேஷ் தலைமையில், பெற்றோர், மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு குறை தீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர், உணவு வழங்காமல் அலைக்கழித்தும், சொத்துகளைக் கேட்டு அடித்து துன்புறுத்தியும் வருவது குறித்து காவல் நிலையத்திலும், ஆட்சியரகத்திலும் அளித்த புகார் மனுக்களின் மீது கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இக்கூட்டத்தில் 30 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.
இதில், வந்திருந்த பல பெற்றோர்கள் உணவு கூட தருவதில்லை என கோட்டாட்சியரிடம் கூறி அழுதனர். பெற்றோர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்க வேண்டும் என்றும், தராவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை எனவும் வாரிசுதாரர்களிடம் கோட்டாச்சியர் எச்சரிக்கை செய்தார். 
இதுகுறித்து கோட்டாட்சியர் கூறுகையில், இப்போது வந்த மனுக்களில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், பெற்றோர்களிடம் சொத்துகளை எழுதி தருமாறு பிள்ளைகள் மிரட்டுவது போன்றவை தொடர்பாக இருக்கின்றன. இவற்களுக்குத் தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com