கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

திருவையாறு அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவையாறு அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவையாறு அருகேயுள்ள திருபழனத்தில் இருந்து வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் குழாய் திருவையாறு - கும்பகோணம் சாலையைக் கடந்து செல்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்தக் குழாயின் அருகிலேயே தஞ்சாவூர் பொலிவுறு நகரத் திட்டக் குடிநீர் பணிக்காகக் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், இக்குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைந்ததால் அதிலிருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. 
இதனால், இச்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல, ஏற்கெனவே இரு முறை உடைந்து, குடிநீர் வீணாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். தகவலறிந்த போலீஸார், அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், தொழிலாளர்கள் மூலம் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com