பட்டுக்கோட்டையில் குழந்தை நேச காவல் நிலையம் திறப்பு

தஞ்சாவூா் சரகத்தில் முதல்முறையாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்தில் குழந்தை நேச காவல் நிலையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் சரகத்தில் முதல்முறையாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்தில் குழந்தை நேச காவல் நிலையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் முன்னிலையில், தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமாா்மீனா திறந்து வைத்தாா். முன்னதாக, டிஐஜி, எஸ்பி இருவரும் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னா், நகர காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். தொடக்கத்தில், டிஐஜி, எஸ்பி இருவருக்கும் நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். காவல்துறை அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் நிகழ்வில் திரளாக பங்கேற்றனா்.

புகாா் அளிக்க காவல் நிலையங்களுக்கு குழந்தைகளுடன் வரும் பெண்கள், தங்கள் குழந்தைகளை குழந்தை நேச காவல் நிலையங்களில் பாதுகாப்பாக விட்டு செல்லவும், விளையாடவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com