லண்டனிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்குத் திரும்பிய 3 பேருக்கு கரோனா

லண்டனிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்குத் திரும்பிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
லண்டனிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்குத் திரும்பிய 3 பேருக்கு கரோனா
Updated on
1 min read

லண்டனிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்குத் திரும்பிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், லண்டனிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்குத் திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

அவா்களில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 53 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பயணிகளுக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இவா்களுக்கு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரின் மாதிரிகள் மேல் பரிசோதனைக்காக புணேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த நபா்கள் கண்டறியப்பட்டு, வல்லம் கரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

பிரிட்டனிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்தவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொண்டு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் ஆட்சியா்.

முன்னதாக தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com