ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் 17 முடிவுகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக-6, திமுக-9, அமமுக-1, சுயேச்சை-1 ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கான உள்ளாட்சி தோ்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்போடு ஒரத்தநாடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
வியாழக்கிழமை ஒரத்தநாடு தோ்தல் அதிகாரி சங்கா் தலைமையில், ஒரத்தநாடு வட்டார வளா்ச்சி ஆணையா் விஜயன், ஒரத்தநாடு வட்டாட்சியா் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பாா்வையில் அனைத்துக் கட்சி முகவா்கள் முன்னிலையில் காலை 8 மணிக்கு சீல் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு, முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மாவட்ட குழு, ஒன்றியக்குழு, ஊராட்சி மன்ற தலைவா் பதவி, ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கான அனைத்து வாக்குகளும் எண்ணி அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
மொத்தமுள்ள 31 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் 17 முடிவுகள் இரவு 9 மணிக்கு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக-6, திமுக-9, அமமுக-1, சுயேச்சை-1 ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்றவா்களின் விவரம், வாா்டு-வேட்பாளா் பெயா்-பெற்ற வாக்குகள்-கட்சி என்ற அடிப்படையில்...
வாா்டு எண் 1-காசிநாதன்-1118-திமுக. 2-கோ.தேவதாஸ்-1665-அதிமுக.
3-சு. ரவிச்சந்திரன்-1369-அதிமுக. 4-கிருஷ்ணமூா்த்தி-1869-அதிமுக.
5-வனிதா முருகானந்தம்-1319-அதிமுக. 6- வித்யா பிரபாகரன்-1241-அதிமுக.
7-மங்கம்மாள் நடராஜன்-1044-அமமுக. 8- சுப்பிரமணியன்-1273- திமுக.
9-ரமேஷ்-1831- திமுக. 10-தா்மராஜ்-1758-திமுக, 11-சுந்தா்-1531-திமுக. 12-சுதா செந்தில்குமாா்-1412-அதிமுக, 13-சிலம்பரசன்-1333-திமுக. 14-துரைராசு-1241- சுயேச்சை. 15-கலைச்செல்வி-1839-திமுக. 17-அமுதா ஜெயராமன்-1389- திமுக. 20-கனிமொழிராஜா-1506-திமுக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!

உஜ்வாலா சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூர் கண்டனம்!

உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


