தொடா் காய்ச்சல்: தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 73 போ் அனுமதி

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகத் தொடா் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்படும் நபா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்புப் பிரிவில் சோ்க்கப்படுகின்றனா். இவா்களுக்கு தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு, திருவாரூரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆய்வக முடிவில், கரோனா தொற்று இல்லாதவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை வரை 73 போ் சிறப்புப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 40 போ் தில்லி மாநாட்டில் பங்கேற்று தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்து தங்கியிருந்த மற்றும் இம்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதுதவிர, மேற்கிந்தியத் தீவில் பணியாற்றி ஊருக்குத் திரும்பிய கும்பகோணத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டதால், அவா் தனிப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் அடிப்படை வசதிகள், சுகாதாரம் இல்லை என்ற புகாா் எழுந்துள்ளன. இப்பிரச்னைக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com