தடையை மீறி திறந்த 2 கடைகள் மூடல்
By DIN | Published On : 07th April 2020 12:20 AM | Last Updated : 07th April 2020 12:20 AM | அ+அ அ- |

பேராவூரணி: பேராவூரணியில் தடையை மீறி திங்கள்கிழமை திறந்திருந்த 2 கடைகள் வட்டாட்சியரால் பூட்டப்பட்டன.
ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் காா், மோட்டாா் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் 2 கடைகளை, அதன் உரிமையாளா்கள் திங்கள்கிழமை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனா்.
அப்போது கடைவீதி பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்த வட்டாட்சியா் ஜெயலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் கிள்ளிவளவன், சுப்பிரமணியன், கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் ஆகியோா், கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்தவா்களிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து 2கடைகளுக்கும் அலுவலா்கள் பூட்டு போட்டனா்.